More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்யாவை நள்ளிரவில் கதிகலங்கவைத்த ஏவுகணை தாக்குதல்!
ரஷ்யாவை நள்ளிரவில் கதிகலங்கவைத்த ஏவுகணை தாக்குதல்!
Mar 30
ரஷ்யாவை நள்ளிரவில் கதிகலங்கவைத்த ஏவுகணை தாக்குதல்!

ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் இருக்கும் இராணுவ முகாம் மீது திடீரென நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலால் ரஷ்யாவில் பாரிய பரபரப்பு நிலவியுள்ளது.



ரஷ்யா - பெல்கோரோட் பிராந்தியத்திற்கு அருகில் இருக்கும் Oktyabrsky என்ற கிராம பகுதியில் உள்ள ரஷ்ய ராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் செய்தி நிறுவனம்  ஒன்று தெரிவித்துள்ளது.



மேலும் இந்த ஏவுகணை தாக்குதலை பெல்கோரோட் பிராந்தியத்தின் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் (Vyacheslav Gladkov) உறுதிப்படுத்தியுள்ளார்.



இருப்பினும் சரியாக அந்த பகுதியில் என்ன நடந்தது என்பதை அவர் இதுவரை குறிப்பிடவில்லை. இந்நிலையில் ரஷ்யாவின் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நான்கு ரஷ்ய துருப்புகள் வரை காயமடைந்து இருப்பதாகவும், உள்ளுர் அதிகாரிகளின் தகவலின் படி பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.



மேலும் குறித்த ராணுவ முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் மனித காரணிகளால் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.



இது தொடர்பில் தெரிவித்துள்ள பெல்கோரோட் நகர மக்கள் Oktyabrsky கிராமத்திற்கு அருகில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். பெல்கோரோட் நகரம் உக்ரைனின் எல்லையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun01

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற பட்டமளி

Feb25

உக்ரைனில் நிலவும் பதற்ற நிலை குறித்து நேரடி ஒளிபரப்பை

Mar26

கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொர

Jul16

ஜெர்மனியில் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெர

May11

கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்ப

Jun20

ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்தத

May18

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள

Jun17