உக்ரைனின் மரியபோல் நகரில் இதுவரையில் 5000 பேர் கொத்து கொத்தாகப் புதைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து நடக்கும் ஷெல் தாக்குதலால் 10 நாட்களுக்கு முன்பு உடல்களை அடக்கம் செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் டிட்யானா லோமகினா கூறியுள்ளார்.
தெற்கு துறைமுகமான மரியபோலில் குறைந்தது 5,000 பேர் ஏற்கனவே புதைக்கப்பட்டுள்ளனர் என்றும் 10,000 பேர் வரை கூட இறந்திருக்கலாம் என்றும் ஒரு மூத்த உக்ரேனிய அதிகாரி கூறியுள்ளார்.