தற்போது சமூகவலைத்தளங்களில் பள்ளியில் உள்ள கழிவறையை ஒரு மாணவி சுத்தம் செய்யும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் தாலுக்கா உட்பட்ட ஆலம்பாக்கம் உயர்நிலைப்பள்ளியில் தான் மாணவி கழிவறையை சுத்தம் செய்தது உறுதியாகியுள்ளது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, மாணவியின் பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், கழிவறையை சுத்தம் செய்ய தூய்மைப்பணியாளர்கள் உள்ள நிலையில், மாணவி எதற்காக சுத்தம் செய்தார் என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.