More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்காவுக்கு சவால் விடும் கிம்? மிரட்டும் மெகா ஏவுகணை
அமெரிக்காவுக்கு சவால் விடும் கிம்? மிரட்டும் மெகா ஏவுகணை
Mar 29
அமெரிக்காவுக்கு சவால் விடும் கிம்? மிரட்டும் மெகா ஏவுகணை

ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன்கள், அமோகமான இராணுவ பலம் ஆகியவை இருந்தால் மட்டுமே, ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து அச்சுறுத்தல்களையும் கட்டுப்படுத்த முடியும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருப்பது உலக அளவில் பேசு பொருளாகியிருக்கிறது.



வியாழன் அன்று வடகொரியா இந்த ஆண்டில் 12வது முறையாக ஆயுத சோதனைகளை நடத்தியது. புதிதாக உருவாக்கப்பட்ட, நீண்ட தூர Hwasong-17 ஏவுகணை ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.



பிரம்மாண்ட ஏவுகணை அமெரிக்காவின் எந்த பகுதியிலும் அணு ஆயுத தாக்குதலை நடத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கா எதிர்ப்பு குரல் கொடுத்தாலும் வழக்கம் போல் கின் ஜாங் உன் அதனை கண்டுகொள்ளவில்லை.ஏவுகணை நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 15,000 கிமீ (9,320 மைல்கள்) வரை பறக்க முடியும்.



மேலும் அமெரிக்காவின் நிலப்பகுதி மற்றும் அதற்கு அப்பாலும் சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை சுமார் 25 மீ (82 அடி) நீளம் கொண்டதாக கூறப்படும் நிலையில், Hwasong-17 உலகின் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்பாக உள்ளது.



வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்



இந்நிலையில் தான் ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன்கள், அமோகமான இராணுவ பலம் ஆகியவை இருந்தால் மட்டுமே, ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து அச்சுறுத்தல்களையும் கட்டுப்படுத்த முடியும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார். இதேபோல் பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வட கொரியா தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



கடந்த வாரம் வாசோங் - 17 ஏவுகணையை தயாரித்த ஆராய்ச்சியாளர் குழுவை அதிபர் கிம் ஜோங் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர்கள் மத்தியில் பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, மேலும் பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வட கொரியா தயாரிக்கும். அணு ஆயுதப் போர் மூண்டாலும், அதை தடுக்கும் வகையில், வட கொரியாவின் திறன் மேம்படுத்தப்படும் என்றார். ஒருவராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுதங்கள் திறன்கள், அமோகமான ராணுவ பலம் இருந்தால்தான், போரைத் தடுக்க முடியும், நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.



ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் கட்டுப்படுத்த முடியும் என்ற கிம், வட கொரியா இன்னும் "சக்தி வாய்ந்த தாக்குதல் வழிமுறைகளை" உருவாக்கும் என்றும், தனது நாடு "அணு ஆயுதப் போரைத் தடுப்பதை இன்னும் தீவிரமாகச் செய்யும்" என்று அவர் கூறியதாக KCNA செய்தி நிறுவனம் கூறியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar24

ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜேர்மனி 2,000 கூடுதல் டாங்கி

Mar17

 மருத்துவ சேவையே இவ்வுலகின் புனிதமான தொழிலாக கருதப்

Mar13

உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் நேற்று 17-வது நாள

Jan19

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடி

Jan27

தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக

Jul31

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்

Mar07

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய

Jul30

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவி

May28

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்

Feb06

கைகளுக்கும் முகத்திற்கும் இரட்டை மாற்று அறுவைச் சிகி

Feb25

உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில்

Mar15

உக்ரைனின் மரியுபோல் நகரில் அத்துமீறி நுழைந்து தாக்கு

Mar08

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஜாம்பவனான ஷேன் வார்னே மா

Sep01

மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக

Mar26

வங்கதேசம் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து ப