More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • காணாமல்போன மாணவன் சடலமாக மீட்பு; நண்பர்கள் மூவர் கைது!
காணாமல்போன மாணவன் சடலமாக மீட்பு; நண்பர்கள் மூவர் கைது!
Mar 29
காணாமல்போன மாணவன் சடலமாக மீட்பு; நண்பர்கள் மூவர் கைது!

பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இருந்து சிறுவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம்ம் தொடர்பில் மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 



பெல்மடுல்ல, பரண்டுவ பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.குறித்த மாணவன் அப்பகுதியில் 10ம் வகுப்பில் படித்து வருவது தெரியவந்துள்ளது.



 மாணவன் கடந்த 26 ஆம் திகதி லெல்லுப்பிட்டிய பகுதிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளதுடன், அவர் வீடு திரும்பாதமை தொடர்பில் அவரது பெற்றோர் கடந்த 27 ஆம் திகதி இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.



இந்நிலையில் நேற்று குறித்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் குறித்த மாணவன் மேலும் சில மாணவர்களுடன் நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.



குறித்த மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும், அவருடன் குளித்துக் கொண்டிருந்த ஏனைய மாணவர்கள் யாரிடமும் கூறாமல் அங்கிருந்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



மாணவன் காணாமல் போனது குறித்து யாரிடமும் கூறாமல் அங்கிருந்து சென்ற மூன்று மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar18

இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்ததன் விளைவே இலங்கையில் த

Sep29

சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுசன ஊடக அ

Feb23

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொ

Oct15

பா.ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப

Sep26

இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் த

Jan28

இலங்கையின் சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை

Feb02

தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தத்

Mar12

மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்

Apr30

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திர

Apr01

 மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச

May03

உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டு

Sep27

திரிபோஷாவில் விசத்தன்மை உள்ளதாக கூறப்பட்டமை தொடர்பா

Jan31

உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் அகழ்வாராய்ச்சி

Mar14

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிண

Sep24

உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை ட