எதிரிகளான ரஷ்யப் படையினர் மீண்டும் ஒன்று சேர்ந்து வருகின்றனர்.
எனினும் அவர்களால் உக்ரைனில் எங்கும் முன்னேற முடியவில்லை என்று உக்ரைன் துணை பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
ரஷ்யப் படைகள் தாங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் நிலைகளை வலுப்படுத்த முயற்சிக்கின்றன.
கெய்வின் பாதுகாப்புகளை உடைக்க முயற்சிக்கின்றன. எனினும் தலைநகரைக் கைப்பற்றும் நம்பிக்கை அவர்களுக்கு இல்லை என்றும் ஹன்னா மல்யார் கூறியுள்ளார்.
உக்ரைனின் தாக்குதல்களுக்கு மத்தியில் பலத்த இழப்புக்களுடன் பெலாரஸுக்குத் திரும்பிய ரஸ்ய படைகள், மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்று உக்ரைனின் ஆயுதப் படை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் உக்ரைன் தலைநகர் கீவைச் சுற்றி வளைக்கும் முயற்சிகளை மீண்டும் அந்த படைகள் மேற்கொள்ளலாம் என்றும் உக்ரைன் ஆயுதப்படை குறிப்பிட்டுள்ளது.