More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உலக அளவில் இந்திய பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது- பிரதமர் மோடி பேச்சு
உலக அளவில் இந்திய பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது- பிரதமர் மோடி பேச்சு
Mar 27
உலக அளவில் இந்திய பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது- பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அகில இந்திய வானொலியில் ‘மன்கிபாத்’ என்ற தலைப்பில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பொதுமக்கள் இடையே உரை நிகழ்த்தி வருகிறார்.



அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில்  நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்ற பிறகு மோடி தனது முதல் மன் கி பாத் உரையை இன்று நிகழ்த்தினார்.



அப்போது அவர் பேசியதாவது:



400 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டியுள்ளது. இது இந்தியாவின் திறன்களையும் ஆற்றலையும் குறிக்கிறது. உலகில் இந்தியப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது என்பதே இதன் அர்த்தம்.



முன்பெல்லாம் பெரிய நபர்கள் மட்டுமே அரசாங்கத்திற்கு பொருட்களை விற்க முடியும் என்று நம்பப்பட்டது ஆனால் தற்போது இ-மார்க்கெட் பிளேஸ் போர்டல் இதை மாற்றியுள்ளது, இது புதிய இந்தியாவின் உணர்வை காட்டுகிறது.



இன்று, நமது சிறு தொழில் முனைவோர் அரசு இ-மார்க்கெட் பிளேஸ் மூலம் கொள்முதல் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு வெளிப்படையான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.



அண்மை காலமாக ஆயுஷ் துறையில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வெற்றி மற்றும் எழுச்சி ஊக்கமளிக்கும் விதங்களில் ஒன்றாக உள்ளது. 



சமீபத்தில் வழங்கப்பட்ட பத்ம விருதுகள் நிகழ்ச்சியில் பாபா சிவானந்தாவைப் பார்த்திருப்பீர்கள், அவருடைய வீரியம் மற்றும் உடற்தகுதியைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். 



அவரது உடல்நிலை விவாதப் பொருளாக உள்ளது. அவருக்கு யோகாவில் ஆர்வம் உண்டு. இவ்வாறு பிரதமர் தமது பேச்சின்போது குறிப்பிட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar26

அமெரிக்காவின் பைசர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அ

Jul28

அமெரிக்காவின் உட்டா மாகாணம் கனோஸ் நகருக்கு அருகே மிகப

Mar12

 உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இன்று 16வது நாளை எட்டியு

Dec31

பாகிஸ்தானின் மத்திய குவெட்டா பகுதியில் வியாழக்கிழமை

Jun15

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Mar10

உக்ரைன் - ரஷ்யா போர் இன்னும் முடிவடையாத நிலையில் மக்கள

Mar11

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்க

Aug23

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்

Aug11

காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவத

Mar22

உலகளாவிய ரீதியில் தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்ற

May13

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளர

Apr05

ஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் ம

Dec31

மியான்மரில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி தலைமையிலான ஆட்ச

Apr08

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் பார் மற்றும் உணவகங

Aug21

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலு