15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
அதே சமயம் 20 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக தோனி 50 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார் ஆகவே Thala come back என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.
ஆனால் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு விஷயம் கடும் வேதனையில் ஆழ்த்தி இருந்தது. 'Mr. IPL' என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் சுமார் பத்து சீசன்களுக்கு மேல் சென்னை அணிக்காக ஆடியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் நிறைய சாதனைகளை படைத்துள்ள ரெய்னாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனையடுத்து, இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில், ரெய்னாவை சிஎஸ்கே உள்ளிட்ட எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த நிலையில் தோனியின் அரை சதம் குறித்து ரெய்னா தனது ட்விட்டர் பதிவில் "தோனி 50 ரன்கள் விளாசியது கண்களுக்கு விருந்தாக அமைந்தது எனவும் இந்த சீசனில் மாஹியிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ள ரெய்னா தனது -commentary எப்படி இருந்தது என பதிவிட்டுள்ளார்.