More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உயிரைக் காப்பாற்ற கழிவறைக்குள் ஓடிய தந்தை மகள்! பரிதாபமாக பலி
உயிரைக் காப்பாற்ற கழிவறைக்குள் ஓடிய தந்தை மகள்! பரிதாபமாக பலி
Mar 27
உயிரைக் காப்பாற்ற கழிவறைக்குள் ஓடிய தந்தை மகள்! பரிதாபமாக பலி

எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட புகைமூட்டத்தில் தந்தையும் மகளும் மூச்சுத்திணறி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



எலெக்ட்ரிக் பைக் வெடிப்பு



வேலூரில் சின்ன அல்லாபுரத்தில் கேபிள் டிவி ஆப்பரேட்டராக இருந்து வருபவர் துரைவர்மா. இவர் நேற்று இரவு தனது எலெக்ட்ரிக் பைக்கை வீட்டில் நிறுத்தி சார்ஜ் போட்டுவிட்டு உறங்க சென்று உள்ளார்.



இந்த நிலையில் திடீரென எலெக்ட்ரிக் பைக்கில் பொறுத்தப்பட்டு இருந்த பேட்டரி வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வீடு முழுவதும் புகைமூட்டமாக மாறியுள்ளது. பைக் வெடித்த சத்தம் கேட்ட விழித்த துரை வர்மாவும் அவரது 13 வயது மகள் ப்ரீத்தியும் தீ விபத்திலிருந்து தப்பிக்க வீட்டின் கழிவறையில் தஞ்சம் அடைந்து இருக்கின்றனர்.



மூச்சுதிணறி உயிரிழப்பு



புகைமூட்டம் கழிவறையையும் சூழ்ந்ததால் இருவரும் அதிலிருந்து தப்பிச்செல்ல முடியாமல் மயங்கி விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்து உள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கழிவறையில் இறந்துகிடந்த தந்தை, மகள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



பிரபலமாகி வரும் எலெக்ட்ரிக் பைக்



இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த 4 நாட்களாக மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார், பைக்குகளுக்கு மாறியுள்ளனர்.



முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு எலெக்ட்ரிக் கார், பைக்குகளை உற்பத்தி செய்து வருகின்றன. அதன் வர்த்தமும் பன்மடங்கு பெருகியுள்ளது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May25

பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்கு

Feb02

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மன

Jun27

இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள

Mar26

துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைப

Apr08

ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீ

Nov03

கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன

Sep09

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் மழையும்,

Jun12

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் கடந்த சில தினங்களு

Mar04

ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் இரண்டு முன்னாள்

Mar18

பெண்களின் நிலை குறித்த ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வில் அ

Jun04

உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ

Jun10

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிவரும் ஆயுதங்கள

Apr18

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில

May25

ரஷ்யா, உக்ரைனின் Kryvyi Rih மீது மூன்று ஏவுகணைகளை ஏவியதாக Dnipropet

Mar22

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கடந்