த்மிழ் சினிமாவில் முதன்மை நடிகரகளாக வலம் வருபவர் விஜய் மற்றும் அஜித் இவர்களுக்கு தமிழகத்தில் மட்டுமில்லாது பல மாநிலங்களில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.
பல வருடங்களாகவே சமூக வலைதளங்களில் விஜய் (Vjiay) மற்றும் அஜித் (Ajith kumar) ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
முதலில் படங்களை வைத்து சண்டை போட துவங்கிய ரசிகர்கள் அதன்பின் தகாத வார்த்தைகளையும் வைத்து பேச ஆரம்பித்து உள்ளார்கள்.
இதை தொடர்ந்து நடிகர் விஜய்யை தவறான பெயரை வைத்து அஜித் ரசிகர்களும், அஜித்தை தவறான பெயர்களை வைத்து விஜய் ரசிகர்களும் டுவிட்டரில் கடுமையாக பேசி வருகின்றனர்.
தொடர்ந்து நடந்து வரும் இந்த சண்டையால் டுவிட்டர் பக்கத்தில் பல பிரபலங்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது பிரபல பேஷன் டிசைனர் வாசுகி பாஸ்கர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த சண்டையை நிறுத்த அஜித் – விஜய் இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.