இலங்கை குறித்த தமது அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ளது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிநோக்கியுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடி பற்றிய பகுப்பாய்வு, இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பரவலால் இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளதுடன், சுற்றுலா பயணிகளின் வருகை பாதிக்கப்பட்டிருந்ததனால், பல கடுமையான முடக்கங்கள் தேவைப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.