More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சிறுமி தலையுடன் கிராமத்தை சுற்றி வந்த வாலிபர் கைது!...
சிறுமி தலையுடன் கிராமத்தை சுற்றி வந்த வாலிபர் கைது!...
Mar 26
சிறுமி தலையுடன் கிராமத்தை சுற்றி வந்த வாலிபர் கைது!...

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் ஜமன்கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி சம்பவத்தன்று காலை கடன்களை முடிப்பதற்காக அங்குள்ள காட்டு பகுதிக்கு சென்றார்.



அப்போது அவளை அதே கிராமத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் பின் தொடர்ந்து சென்றார். திடீரென அவர் தான் கையில் வைத்து இருந்த கோடாரியால் அந்த சிறுமியை வெட்டினார். இதில் நிலைகுலைந்த அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனே அந்த வாலிபர் சிறுமியின் தலையை தனியாக துண்டித்து எடுத்தார்.



பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட துண்டிக்கப்பட்ட தலையுடன் அந்த கிராமத்தை அவர் சுற்றி வந்தார். இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் ஒன்று சேர்ந்து வாலிபரை பிடிக்க முயன்றனர்.



அப்போது அவர் கையில் வைத்து இருந்த கோடாரியால் யாராவது பக்கத்தில் வந்தால் கொன்று விடுவேன் என மிரட்டினார். பின்னர் வாலிபர் அங்குள்ள ஒரு கிணற்றில் இறங்கி ரத்தம் தோய்ந்த கோடாரியை கழுவினார்.



இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த அவரது மனைவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.ஆத்திரம் அடைந்த வாலிபர் மனைவியை கண் மூடிதனமாக தாக்கினார்.



இது பற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.



மேலும் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கும் அவருக்கும் எந்த முன்விரோதம் இல்லை என்பதும் தெரிந்தது. எதற்காக அவர் இந்த செயலில் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை. குடிபோதையில் அவர் கொலை செய்தார? அல்லது மனநிலை சரியில்லாமல் உள்ளாரா? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தபட்ட கோடாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.சிறுமியின் துண்டிக்கபட்ட தலை மற்றும் உடல் ஆகியவற்றை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May21

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந

Jun23

கொரோனா வைரசுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி த

Dec28

மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.ப

Sep02

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்