More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? காதலனால் வெளியே கசிந்த உண்மை
கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? காதலனால் வெளியே கசிந்த உண்மை
Mar 26
கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? காதலனால் வெளியே கசிந்த உண்மை

ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றியும், தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா, இல்லையா என்பது பற்றியும் அவரது காதலர் சாந்தனு ஓப்பனாக பேட்டி அளித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.



காதலருடன் நெருக்கமாக ஸ்ருதி



நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், நடிகை, பின்னணி பாடகி, இசைக் கலைஞர் என பல திறமைகளைக் கொண்டவர். இவர் 2020 ம் ஆண்டு சாந்தனு ஹசாரிக்கா என்ற டூடுல் கலைஞரை காதலித்து வருவதாக அறிவித்தார். இவர்கள் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி செம வைரலானது.



அதற்கு பிறகு 2020 ம் ஆண்டு கொரோனா லாக்டவுன் சமயத்தில் இருவரும் மும்பையில் உள்ள ஸ்ருதியின் வீட்டில் ஒன்றாக வசிக்க துவங்கினர். காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள், வீடியோக்களையும் ஸ்ருதி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். தற்போது வரை இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டூ கெதர் உறவில் வாழ்ந்து வருகிறார்கள்.  



திருமணம் ஆகிவிட்டதா?



இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சாந்தனுவிடம், ஸ்ருதிஹாசன் உடனான உறவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் திட்டம் உள்ளதா என கேட்கப்பட்டது. அதற்கு ஓப்பனாக சாந்தனு சொன்ன பதில் தான் தற்போது மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது. சிலர், அவர் என்ன சொல்ல வருகிறார். ஏன் இப்படி குழப்புகிறார் என கேள்வி எழுப்பி வருகின்றனர். 



சாந்தனு ஓபன் டாக்



சாந்தனு கூறுகையில், ஆக்கபூர்வமாக எங்களுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. அதுவே எங்களுடைய உறவு எவ்வளவு பலமானது என காட்டி விட்டது. நாங்கள் ஆக்கப்பூர்வமானவர்கள். இருவரும் இணைந்து ஆக்கப்பூர்வமான விஷயங்களை உருவாக்கி வருகிறோம் . அது தான் எங்களுக்கு மிகவும் முக்கியம். திருமணம் நடக்குமா, எப்போது நடக்கும் என்பது பற்றி எனக்கு தெரியாது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவித்துள்ளார். 



ஸ்ருதி என்னை பல வகைகளிலும் ஊக்கப்படுத்தி உள்ளார். உண்மையில் நாங்கள் மிகவும் உற்சாகமான ஜோடி. வாழ்க்கையில் நிறைய விஷயங்களில் ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்பட்டுள்ளோம். என்னுடைய துறையிலேயே எனக்கு ஆக்கப்பூர்வமான, ஊக்கமளிக்கும் ஒரு துணை இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.



தினமும் புதுவிதமான பலவகையான எண்ணங்கள், முன்னேற்றங்கள் வருகிறது. எனது துணையுடன் இப்படி ஒரு பிணைப்பை கொண்டிருப்பது ஒரு கலைஞராக எனக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது என்றார் சாந்தனு.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov06

தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும்,

Feb20

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோ

Sep21

வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித், தற்

Feb02

 பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் ஒளிபரப்பு

Sep06

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு

Feb24

பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா வெளியேறியதை அடுத்து, போட

May03

நடிகர் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத

Feb14

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி

May06

சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்த

Jan29

பாரதி கண்ணம்மா சீரியல் TRP-யில் தொடர்ந்து பல சாதனைகளை பட

Oct23

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிச

Oct11

பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம்

Jun18

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், தற

May15

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த

Mar06

ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் காத