More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • 2021-ல் 17 லட்சம் உயிரினங்களை கொன்று குவித்த திட்டம்! அமெரிக்காவில் வெளியான அதிச்சியூட்டும் அறிக்கை
2021-ல் 17 லட்சம் உயிரினங்களை கொன்று குவித்த திட்டம்! அமெரிக்காவில் வெளியான அதிச்சியூட்டும் அறிக்கை
Mar 26
2021-ல் 17 லட்சம் உயிரினங்களை கொன்று குவித்த திட்டம்! அமெரிக்காவில் வெளியான அதிச்சியூட்டும் அறிக்கை

அமெரிக்காவில் ஒரு கூட்டாட்சி திட்டத்தின் விளைவாக 2021-ஆம் ஆண்டில் 1.75 மில்லியன் விலங்குகள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் அறிக்கை வெளியாகியுள்ளது.



விவசாய உற்பத்தி, அழிந்து வரும் உயிரினங்கள் மற்றும் மனித ஆரோக்கியத்தை பாதுகாக்க விலங்குகளை கொன்று வருவதாக வனவிலங்கு சேவைகள் தெரிவிக்கின்றன.



ஒரு மணிநேரத்திற்கு சுமார் 200 உயிரினங்கள் என்ற வீதத்தில், 2021-ஆம் ஆண்டில் அமெரிக்கா முழுவதும் 1.75 மில்லியன் (17.5 லட்சம்) விலங்குகளை கொன்றதற்கு அமெரிக்க விவசாயத் துறையின் கீழ் உள்ள ஒரு பிரிவு பாதுகாப்பு குழுக்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது என தி கார்டியன் தெரிவித்துள்ளது.



டெக்சாஸ், கொலராடோ மற்றும் இடாஹோ போன்ற மாநிலங்களில் விவசாயத் தொழிலுக்கு பயனளிக்கும் விதமாக கூட்டாட்சி வனவிலங்கு திட்டத்தின் ஒரு பகுதியாக ஓநாய்கள், கொயோட்டுகள் (coyotes), கூகர்கள் (cougars), பறவைகள் மற்றும் பிற காட்டு விலங்குகளை குறிவைத்து கொள்ளப்பட்டன.



இந்த திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி, வனவிலங்கு சேவைகள் கடந்த ஆண்டு 324 சாம்பல் ஓநாய்கள், 64,131 கொயோட்டுகள், 433 கருப்பு கரடிகள், 200 மலை சிங்கங்கள், 605 பாப்கேட்கள், 3,014 நரிகள், 24,687 பீவர்ஸ் மற்றும் 714 நதி நீர்நாய்கள் கொள்ளப்பட்டுள்ளன.



காட்டுப் பன்றிகள் மற்றும் நியூட்ரியா எனப்படும் ஒரு வகை ராட்சத சதுப்பு கொறித்துண்ணிகள் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு அச்சுறுத்தலாகக் கருதும் சில ஆக்கிரமிப்பு இனங்களை குறிவைப்பதாக வனவிலங்கு சேவைகள் கூறுகின்றன. இது அமெரிக்காவின் பூர்வீக விலங்கு இனங்களை சர்ச்சைக்குரிய வகையில் கொன்றுள்ளது.



"இந்த காட்டுமிராண்டித்தனமான கூட்டாட்சி திட்டம் நூறாயிரக்கணக்கான பூர்வீக விலங்குகளை அழிப்பதைப் பார்ப்பது வயிற்றைப் புரட்டுகிறது" என்று உயிரியல் பன்முகத்தன்மைக்கான மையத்தின் மாமிச உணவு பாதுகாப்பு இயக்குனர் கோலெட் அட்கின்ஸ் கூறியுள்ளார்.



"கால்நடைத் தொழிலுக்கு நன்மை பயக்கும் என்று கூறப்படும் ஓநாய்கள் மற்றும் கொயோட்கள் போன்ற மாமிச உண்ணிகளைக் கொல்வது அதிக மோதல்கள் மற்றும் அதிக கொலைகளுக்கு வழிவகுக்கிறது. இது உண்மையிலேயே தீய சுழற்சியாகும், மேலும் வனவிலங்கு சேவைகளிடமிருந்து மாற்றத்தை நாங்கள் தொடர்ந்து கோருவோம்" என்று அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb19

ஜேர்மன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் ரோடே தீவி

Apr03

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதி

Mar30

புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (29) திடீரென ரோமில் உள

Mar13

குவாட் கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாடு நேற்று காணொலி

Sep20

அமெரிக்காவை ஒட்டி மெக்சிகோ நாடு உள்ளது. அமெரிக்காவில்

Jul11

ஓர் ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்க

Mar22

உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மக

Feb23

இந்த உள்ளாடையை ஒருநாள், இரண்டு நாள் அல்ல100 நாட்கள் வரைக

Mar09

நேட்டோ அமைப்பில் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உ

May14

சீனாவின் தென்மேற்கு நகரம், பன்னிங். இங்கு பிறந்த நாள் வ

May20

கடந்த சில தினங்களுக்கு முன் அல் ஜசீரா ( Al Jazeera) செய்தி நிறு

May18

உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப

Sep23

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக

Jun04

அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு

Mar21

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 26வது நாளை எட்டி