More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்யப் படைகள் உக்ரைன் படைகளால் சுற்றி வளைப்பு?: உக்கிரமாக திருப்பி அடிக்கும் உக்ரைன்
ரஷ்யப் படைகள் உக்ரைன் படைகளால் சுற்றி வளைப்பு?: உக்கிரமாக திருப்பி அடிக்கும் உக்ரைன்
Mar 25
ரஷ்யப் படைகள் உக்ரைன் படைகளால் சுற்றி வளைப்பு?: உக்கிரமாக திருப்பி அடிக்கும் உக்ரைன்

உக்ரைனை ஊடுருவ வந்த ரஷ்யப் படைகள், இப்போது தாங்களே சுற்றி வளைக்கப்படும் அபாயத்துக்குள்ளாகியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், ரஷ்யப் படைகளை உக்ரைன் உக்கிரமாக திருப்பித் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.



உக்ரைன் தலைநர் Kyivக்கு மேற்கே உள்ள Makariv மற்றும் Moschun என்னும் இரு நகரங்களை உக்ரைன் படைகள் ரஷ்யப்படைகளிடமிருந்து மீட்டிருக்கலாம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.



அப்படி அந்த நகரங்கள் உக்ரைன் வீரர்களால் மீட்கப்பட்டிருக்குமானால், ஏற்கனவே Bucha மற்றும் Irpin நகரங்களுக்குள் ஊடுருவி, அங்கு முகாமிட்டிருக்குரஷ்யப் படைகள், உக்ரைன் படைகளால் சுற்றி வளைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.



ஆக, உக்ரைனைச் சுற்றி வளைக்க வந்த ரஷ்யப் படைகள் தாங்களே உக்ரைன் படைகளால் சுற்றி வளைக்கப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளதால், அவர்களால் இனி உணவு, ஆயுதம் ஆகிய விடயங்களை ரஷ்ய தரப்பிடமிருந்து பெற முடியாது. ஆகவே, சரணடைவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அப்படி அவர்கள் சரணடையும் பட்சத்தில், அது ரஷ்ய இராணுவம் சந்திக்கும் மிக மோசமான தோல்விகளில் ஒன்றாக அமையும்.



இந்நிலையில், ரஷ்ய டாங்கு ஒன்றை உக்ரைன் படைகள் ஏவுகணை மூலம் சின்னாபின்னமாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், Berdyansk நகரிலுள்ள துறைமுகத்தில், ரஷ்ய கப்பல் ஒன்று உக்ரைன் தாக்குதலில் வெடித்துச் சிதறும் ஒரு காட்சியும் வெளியாகியுள்ளது.



Kyivக்கு மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடுமையாக சண்டை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுவரை ரஷ்யப் படைகளால் தாக்கப்பட்டு வந்த உக்ரைன் படைகள், இழந்த நகரங்களை மீட்கும் முயற்சியாக இப்போது திருப்பித் தாக்கத் துவங்கியுள்ளதாக, தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar26

ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிலையை பலவீனப

Mar23

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடந

Sep17

மேற்கு நேபாளத்தில் நிலச்சரிவு காரணமாக அச்சாம் மாவட்ட

Mar14

ரஸ்யா சீனாவிடம் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை கோரு

Jun01

இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல்

Feb24

மஸ்தார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் க

May29

கடந்த ஏழு தசாப்தங்களாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அ

Feb04

எகிப்தில்  2000  ஆண்டு பழமையான தங்க நாக்கினைக்  கொண

Mar30

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் தாக்குதல் ஒரு மாத

Sep17

சீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்

Sep17

உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்

Feb24

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Jan18

ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்ப

Sep14

ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் வரை கொல

Dec20

உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி அமைத்