உக்ரைனில் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Maria Zakharova, உக்ரேனில் சிறப்பு ராணுவ நடவடிக்கை தொடங்கி சரியாக ஒரு மாதம் ஆகிறது என கூறினார்.
உக்ரைனில் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று அழைக்கப்படும் மோதல்கள் திட்டமிடப் படி நடந்து வருகிறது, அறிவிக்கப்பட்ட அனைத்து இலக்குகளும் அடையப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், ஏற்கனவே உக்ரைன் படைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது என Maria Zakharova தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் எந்தப் பகுதியைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.