More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • தோல்வியின் விளிம்பில் ரஷ்யா - அணுவாயுத தாக்குதலுக்கு தாயாராகும் புட்டின்!.
தோல்வியின் விளிம்பில் ரஷ்யா - அணுவாயுத தாக்குதலுக்கு தாயாராகும் புட்டின்!.
Mar 23
தோல்வியின் விளிம்பில் ரஷ்யா - அணுவாயுத தாக்குதலுக்கு தாயாராகும் புட்டின்!.

ரஷ்யா இன்னும் உக்ரைனில் தனது இராணுவ இலக்குகள் எதையும் அடையவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஒப்புக்கொண்டுள்ளார்.



மொஸ்கோ அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்ற கருத்தையும் அவர் நிராகரிக்கவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.



தனது இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என புட்டினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். CNN ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.



புட்டின் எந்த சூழ்நிலையில் ரஷ்யாவின் ஆயுத திறனைப் பயன்படுத்துவாரா என செய்தித் தொடர்பாளரிடம் கேள்வி எழுப்பியதற்கு, எங்கள் இருப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என அவர் பதிலளித்துள்ளார்.



ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாகக் கருதும் நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை புட்டின் இதற்கு முன்னர் சுட்டிக்காட்டினார்.



கடந்த மாதம் ரஷ்ய ஜனாதிபதி ஒரு தொலைக்காட்சி அறிக்கையில், “எங்கள் வழியில் நிற்க முயற்சித்தாலும் அல்லது எங்கள் நாட்டிற்கும் எங்கள் மக்களுக்கும் அச்சுறுத்தல்களை உருவாக்குவது எதுவாக இருந்தாலும், ரஷ்யா உடனடியாக பதிலளிக்கும் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அதன் விளைவுகள் உங்கள் முழு வரலாற்றிலும் நீங்கள் பார்த்திராத வகையில் இருக்கும்” என குறிப்பிட்டிருந்தார்.



இந்த நிலையில் உக்ரைனில் புட்டின் என்ன சாத்தித்துள்ளார் என செய்தி தொடர்பாளரிடம், ஊடகவியலாளர் வினவியதற்கும், இன்னும் ஒன்றையும் சாதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் திட்டங்களின்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



இலக்குகள் எட்டப்படும் வரை இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என செய்தி தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan13

இன்னும் 20 ஆண்டுகளில் பிரித்தானியாவில் பிறக்கும் கால்

Sep08

அமெரிக்காவில் நியூயார்க் நகர் புரூக்ளின் பகுதியில் ப

Mar15

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து

May28

கனடாவின் Bowmanville உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும்

Sep10

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது

Jun20

ரஷ்யாவில் நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை

Jul16

ஜெர்மனியில் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெர

Mar21

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் 95-வது பிறந்த நா

Mar14

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக

Mar10

உக்ரைனிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் மீண்டும் சமாதான

Mar29

எதிரிகளான ரஷ்யப் படையினர் மீண்டும் ஒன்று சேர்ந்து வரு

Aug21

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலு

Mar28

ரஷ்ய வீரர்கள் பலரை உக்ரைன் படையினர் பிடித்து வைத்துள்

Jun04

உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ

May18

ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் செல்லும