தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் பிரபலங்களாக இருப்பது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி.
புதிய கார், படம்
இவர்கள் இருவரும் எப்போதும் ஏதாவது செய்துகொண்டே இருக்கிறார்கள். அடிக்கடி செய்திகளிலும் இடம்பெறுகிறார்கள். அண்மையில் இருவரும் சேர்ந்து புதிய கார் அதற்கான பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பின் இருவரும் சேர்ந்து சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
அடுத்ததாக விக்னேஷ் சிவன் அஜித்துடன் இணையும் தகவல் வர வெடியெல்லாம் வைத்து கொண்டாடப்பட்டது.
போலீசில் புகார்
இந்த நேரத்தில் விக்னேஷ் சிவன்-நயன்தாரா மீது சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ரவுடி என்ற பெயரில் தயாரிப்ப நிறுவனம் வைத்திருப்பதால் புகார் வந்திருப்பதாக கூறப்படுகிறது.