More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • கண்ணா 2வது லட்டு திண்ண ஆசையா..? சிஎஸ்கே அணியில் மிரட்டும் இந்திய ஆல்ரவுண்டர்.. அசந்து போன தோனி
கண்ணா 2வது லட்டு திண்ண ஆசையா..? சிஎஸ்கே அணியில் மிரட்டும் இந்திய ஆல்ரவுண்டர்.. அசந்து போன தோனி
Mar 22
கண்ணா 2வது லட்டு திண்ண ஆசையா..? சிஎஸ்கே அணியில் மிரட்டும் இந்திய ஆல்ரவுண்டர்.. அசந்து போன தோனி

ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் சிஎஸ்கே அணியில் இந்திய ஆல் ரவுண்டர் அதிரடியாக மிரட்டுகிறார்.



சூரத்தில் சிஎஸ்கே அணிக்குள் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் யார் சிறப்பாக விளையாடுகிறாரோ, அவர்களை பிளேயிங் லெவனில் சேர்க்க தோனி திட்டமிட்டு இருந்தார்.ஏற்கனவே குட்டி ஹர்திக் பாண்டியா என போற்றப்படும் ராஜவர்த்தனே ஹங்கர்கேகர் அதிரடியாக விளையாடும் நிலையில், அவரையே மிஞ்சிய ஒரு இந்திய ஆல் ரவுண்டர் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளார்.



ஆல் ரவுண்டர்



இந்திய அணியில் ஆல் ரவுண்டராக விராட் கோலியால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் சிவம் துபே. ஆர்சிபி அணியில் முதலில் இருந்தார், பின்னர் ஃபார்ம் குன்றியதால் ராஜஸ்தான் அணிக்கு விலை போனார். அங்கு அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சிவம் துபேவை 4 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது சிஎஸ்கே.சிஎஸ்கேவின் இந்த முடிவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.



இவருக்கு செலவு செய்த 4 கோடி ரூபாயை, டுபிளஸிஸ்க்கு தந்து இருக்கலாம் என கடுமையாக சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் அந்த விமர்சனத்தை எல்லாம் தற்போது அடித்து உடைத்துள்ளார் சிவம் துபே. தோனி பந்தயம் கட்டிய குதிரை, தோற்காது என்று சொல்வதை போல் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார் துபே.



யுவராஜ் சிங் தனது இளமை காலத்தில் எப்படி செயல்பட்டாரோ அதே போல் மனுஷன் பேட்டிங்கில் அசத்திவிட்டார். வேகப்பந்து, சுழற்பந்துவீச்சு என சிக்சர்களை பறக்கவிட, எதிர் திசையில் நின்ற தோனியே அவரிடம் சென்று பாராட்டினார். சிவம் துபேவின் இந்த அதிரடி ஆட்டத்தை கண்ட சிஎஸ்கே பயிற்சி குழு துள்ளி குதித்து வருகின்றது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar04

இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கு பின் புதிய நிகழ்வ

Sep26

சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக

Jan25

டோயோட்டா தாய்லாந்து ஓபன் (Thailand Open) சர்வதேச பேட்மிண்டன் போ

Oct02

இந்தோனேசியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து ப

Mar08

2022 ஐபிஎல் தொடரில் மீண்டும் கோப்பை வெல்வதற்கான ஆயத்த பண

Dec27

டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வித்த

Jan22

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா

May04

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெ

Jul06

டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்க

Jul15

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும்

Nov21

200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது மத்தியஸ்தர

May04

நடப்பு ஐபிஎல் சீசனின் ஐபிஎல் பிளே ஆஃப் குறித்து முக்

Feb13

ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அண

May06

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சி

Feb05

இங்கிலாந்து 20க்கு20 அணியில் இருந்து நீக்கப்பட்ட ஜோ ரூட