More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • 2 ஆயிரம் குழந்தைகளை ரஷியா கடத்தி சென்றுவிட்டது- உக்ரைன் குற்றச்சாட்டு
2 ஆயிரம் குழந்தைகளை ரஷியா கடத்தி சென்றுவிட்டது- உக்ரைன் குற்றச்சாட்டு
Mar 22
2 ஆயிரம் குழந்தைகளை ரஷியா கடத்தி சென்றுவிட்டது- உக்ரைன் குற்றச்சாட்டு

உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மக்களை பிணயக்கைதிகளாக பிடிப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ரஷியா கடத்தி சென்று உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.



இது குறித்து வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது:-



டான்பாஸ் பிராந்தியத்தில் இருந்து குழந்தைகளை ரஷியா கடத்தி சென்றுள்ளது. ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியில் இருந்து 2,389 குழந்தைகள் ரஷியாவுக்கு சட்ட விரோதமாக நாடு கடத்தப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.



ரஷியாவின் படையெடுப்பில் குழந்தைகள் குறி வைக்கப்பட்டு கடத்தப்படுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.



டான்பாஸ் மாகாணத்தின் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டி லும் உள்ளது.



உக்ரைன் மீது போரை தொடங்குவதற்கு முன்பு ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர் வசம் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை தனி சுதந்திர நகரங்களாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb26

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே கடுமையான போர் இடம்ப

Aug24

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த 14-ம் தேதி கால

Feb26

போரை சுமூகமாக முடிக்க உக்ரைன் அதிகாரத்தை ராணுவம் கைப்

Apr26

அமெரிக்க பயங்கரவாதப் பட்டியலில் இருந்து ஈரானின் இஸ்ல

Jul11

விர்ஜின் கேலடிக் என்பது ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி

Dec26

சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிடைத்தமையினால் கனேடிய ம

Aug18