ரஷ்யா போர்க்கப்பலை உக்ரைன் படைகள் குண்டு போட்டு தகர்த்ததாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை ஒடேசா நகருக்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீடியோவில், கடலில் சரமாரியாக வீசப்படும் குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறுவதை காட்டுகிறது.
மார்ச் 20ம் திகதி வரையிலான நிலவரப்படி, உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா 14,700 துருப்புகளை இழந்துள்ளதாக உக்ரைனின் ஆயுத படைகள் தெரிவித்துள்ளன.
அதுமட்டுமின்றி, 96 போர் விமானங்கள், 476 டேங்கிகள், 118 ஹெலிகாப்டர்கள் மற்றும் 3 படகுகளை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.