சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், விபத்து தொடர்பிலான சிசிடிவி காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம், குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 133 பேருடன் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் குவாங்ஸி அருகே மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த விமானம் விழுந்து நொறுங்கிய சிசிடிவி காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
விபத்துக்கு முன்பாக விமானம் தலைகீழாக செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. உள்ளூர் சுரங்க நிறுவனத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கெமிராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/YzoWI8aL9f0