இப்படத்தை தொடர்ந்து அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, ஹாலிவுட் பிரபலத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க பிரபல காமெடி நடிகர் பிரேம்ஜி-யை கமிட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை தான் நடித்த படங்களில் காமெடி செய்த வந்த நடிகர் பிரேம்ஜி முதல் முறையாக வில்லனாக நடிக்கவுள்ளார்.
விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.