சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலிக்கு 20 நாட்களாகியும் விசா கிடைக்காத விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் பயிற்சி செய்து வருகின்றனர்.இந்த நிலையில், இந்த பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக இங்கிலாந்த வீரர் மொயின் அலி, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி இந்தியா வர விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கான விசா எப்போதும் ஒரு நாளில் கிடைத்துவிடும். அதுவும் மொயின் அலி போன்ற நட்சத்திர வீரர்களுக்கு எவ்வித சிக்கலும் சாதாரணமாக இருக்காது. ஆனால் இம்முறை மொயின் அலி விசாவுக்கு விண்ணப்பித்து 20 நாட்களாகியும் இன்னும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதனால் மொயின் அலி இந்தியாவுக்கு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சீசனில் மொயின் அலி சென்னைக்கு மிகவும் முக்கியமான வீரராக இருந்தார். 15 போட்டிகளில் விளையாடி 357 ரன்களும், 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.ரெய்னா இல்லாத குறையை கடந்த முறை மொயின் அலி தனது பேட்டிங் மூலம் நிவர்த்தி செய்தார் மொயின் அலி.
அதனால் ஏலத்துக்கு முன்பே மொயின் அலியை விட்டு கொடுக்காமல் சிஎஸ்கே அணி தக்கவைத்து கொண்டது. இந்த நிலையில், மொயின் அலி ஒரு இஸ்லாமியர் என்பதால் மத்திய அரசு பாகுப்பாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், மொயின் அலிக்கு விசா கிடைப்பதற்கான தாமதம் ஏன் என்று தெரியவில்லை.