More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திடீரென ரத்துச் செய்யப்பட்ட மோடியின் இலங்கை பயணம்!
திடீரென ரத்துச் செய்யப்பட்ட மோடியின் இலங்கை பயணம்!
Mar 20
திடீரென ரத்துச் செய்யப்பட்ட மோடியின் இலங்கை பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அந்த பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.



இது சம்பந்தமான எந்த காரணமும் இந்திய தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை என அறியவருகிறது.



இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரவும், அதன் பின்னர் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தை திறந்து வைக்கவும் அதன் பின்னர் பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றவும் திட்டமிடப்பட்டிருந்தது.



அத்துடன் பலாலி சர்வதேச விமான நிலையத்தை இந்திய பிரதமர் மோடி மீண்டும் திறந்து வைப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இவ்வாறான நிலையிலேயே அவரது இலங்கை பயணம் இரத்துச் செயயப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 



இலங்கைக்கான பயணத்தை இரத்துச் செய்து விட்டு இணையத்தள தொழிற்நுட்பம் ஊடாக பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்ற மோடி தீர்மானித்தள்ளதாக கூறப்படுகிறது.



இது தொடர்பாக தகவல் வெளியிடுவதை இந்திய உயர்ஸ்தானிகராலயம் தவிர்த்துக்கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar11

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்ப

Sep09
Jul08

மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்க

Mar21

அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக ந

Sep19

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணி

Jul01