விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Start Music - Premier League என்ற நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா மற்றும் தமிழும் சரஸ்வதியும் சீரியலைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
காமெடி கேம் ஷோவான இதில், முத்து படத்தில் இடம் பெற்ற ‘தில்லானா, தில்லானா’ பாடலுக்கு பாரதி - கண்ணம்மா - வெண்பா மூவரும் ஒன்றாக நடனமாடியுள்ளனர்.
அதற்கு ஆங்கர் மா.கா.பா. பாரதி கண்ணம்மா சீரியல் பார்த்து எத்தனை குடும்பம் சண்டை போட்டு, அழுது கொண்டு இருக்கிறது.
இங்க வந்து ‘தில்லானா, தில்லானா’ என டான்ஸ் ஆடுறீங்க, பாருங்க மக்களே எல்லாம் நடிப்பு என கலாய்த்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.