More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்ரைன் மண்ணிலுள்ள ரஷ்ய ஆயுத கழிவுகளால் ஏற்பட்டுள்ள ஆபத்து
உக்ரைன் மண்ணிலுள்ள ரஷ்ய ஆயுத கழிவுகளால் ஏற்பட்டுள்ள ஆபத்து
Mar 20
உக்ரைன் மண்ணிலுள்ள ரஷ்ய ஆயுத கழிவுகளால் ஏற்பட்டுள்ள ஆபத்து

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 25 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.



இந்நிலையில்,உடனடியாக ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்றும்,இல்லையெனில் போரினால் ஏற்படும் விளைவுகளை ரஷ்யா பல தலைமுறைகளாக அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் உக்ரைன் அதிபர் ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.



இந்நிலையில்,உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு முடிந்தாலும் உக்ரைன் மண்ணில் இருக்கும் ரஷ்ய படைகளின் ஆயுத கழிவுகளை அகற்ற பல ஆண்டுகள் ஆகலாம் என உக்ரைன் உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் உக்ரைன் உள்துறை மந்திரி மேலும் கூறுகையில், 



ரஷ்ய படைகளின் ஆயுத கழிவுகளை அகற்ற பல ஆண்டுகள் ஆகலாம்.இதற்கு மேற்கத்திய நாடுகளின் உதவி நிச்சயம் தேவைப்படும்.



“உக்ரைன் மீது ஏராளமான குண்டுகள் மற்றும் கண்ணிவெடிகள் வீசப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பகுதி வெடிக்கவில்லை. அவை இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. அவற்றைத் அகற்ற மாதங்கள் அல்ல, வருடங்கள் ஆகும்.



மேலும் ரஷ்யாவின் ஆயுத கழிவுகள் தவிர, ரஷ்ய படைகளின் ஆக்கிரமிப்பை தடுக்க விமான நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உக்ரைன் வீரர்கள் கண்ணிவெடிகளை புதைத்துள்ளனர். அவற்றையும் எங்களால் உடனடியாக அகற்ற முடியாது.



எனவே இவற்றை அகற்ற அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவி தேவை” எனவும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug05
May27

நைஜீரியா நாட்டின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில்

Mar05

அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எ

Sep24

உக்ரைன் - ரஷ்யா மத்தியிலான போர் மீண்டும் சூடுபிடித்து

Feb25

பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும்

Mar25

2022ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமெரிக்க டொலருக்க

Jun07

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலாஹாரிஸ் அரசுமுறை பயணமாக குவ

May31