More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • தொடரும் தாக்குதல்கள்! உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையை விரும்பும் ரஸ்ய ஜனாதிபதி!.
தொடரும் தாக்குதல்கள்! உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையை விரும்பும் ரஸ்ய ஜனாதிபதி!.
Mar 18
தொடரும் தாக்குதல்கள்! உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையை விரும்பும் ரஸ்ய ஜனாதிபதி!.

போர்க்களத்தில் உக்ரைன் படைகள் தொடர்ந்தும் பலத்த எதிர்ப்பை காட்டி வரும் நிலையில், உக்ரைன் விடயத்தில் தமது கோரிக்கைகள் என்ன என்பதை ரஸ்யா, துருக்கியிடம் விளக்கியுள்ளது.



ரஸ்ய ஜனாதிபதி புடின், துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப்பிடம் இதனை விளக்கியுள்ளார் உக்ரைன் நடுநிலையாக இருக்க வேண்டும் மற்றும் நேட்டோவில் சேர விண்ணப்பிக்கக் கூடாது என்பது இதில் முதலாவது கோரிக்கையாகும்.



இதனை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளார்.



உக்ரைனுடன் சமாதான உடன்படிக்கைக்கு ரஸ்யாவின் துல்லியமான கோரிக்கைகளாக இவை அமையும் என்று புடின், துருக்கியின் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.



இதேவேளை ஏனைய கோரிக்கைகள் ரஸ்ய தரப்பின் கௌரவத்தை காப்பாற்றும் கோரிக்கைகளாக அமைந்துள்ளன.



ரஸ்யாவிற்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆயுதக் குறைப்பு செயல்முறையை உக்ரைன் மேற்கொள்ள வேண்டும்.அத்துடன் உக்ரைனில் ரஸ்ய மொழிக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்றும் புடின் கோரியுள்ளார்



இதேவேளை இந்த விடயங்களில் உடன்பாடு ஏற்படுவதற்கு முன்பு தனக்கும் ஜனாதிபதி ஸெலென்ஸ்கிக்கும் இடையே நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகள் தேவை என்று புடின் குறிப்பிட்டுள்ளார்.



ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸின் நிலையைப் பற்றி புடின், உக்ரைனில் இருந்து ஏற்கனவே பிரிந்து சென்ற கிரிமியாவின் நிலையை வலியுறுத்தியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar06

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி

Mar17

ஜப்பான் நாட்டில் நேற்று 7.3 ரிக்டர் அளவுகோலில் பயங்கர ந

Jun30

இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து

Feb14

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில

Aug14

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்

Jun03

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல

Jun17