More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அடுத்த விலை உயர்வு; சுமார் 500 தொழிற்சாலைகளுக்கு மூடு விழா?
அடுத்த விலை உயர்வு; சுமார் 500 தொழிற்சாலைகளுக்கு மூடு விழா?
Mar 16
அடுத்த விலை உயர்வு; சுமார் 500 தொழிற்சாலைகளுக்கு மூடு விழா?

மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே ஷொப்பிங் பைகள் மற்றும் லஞ்ச் சீற்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இத்தகவலை அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மறுசுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



அதன்படி ஒரு ரூபாவுக்கு விற்கப்பட்ட ஷொப்பிங் பையின் மொத்த விலை 2 ரூபாவாகவும் 5 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஷொப்பிங் பையின் விலை 9 ரூபாவாகவும் 10 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஷொப்பிங் பையின் விலை 17 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.



அத்துடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த லஞ்ச் சீற்றின் விலை 2.50 ரூபாவிலிருந்து 3.50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



அதேவேளை மூன்று மாதங்களாக மூலப்பொருட்களை உரிய முறையில் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் 500 தொழிற்சாலைகள் உற்பத்தி நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாகவும் 15,000 பேர் வேலை இழந்துள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் அனுர ஹேரத் தெரிவித்தார்.



மேலும் தற்போது சுமார் 400 தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும் நாளாந்த உற்பத்திக்குத் தேவை யான மூலப்பொருட்களை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு கிலோ மூலப்பொருளின் விலை 500 ரூபாவிலிருந்து 750 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 



அதேவேளை  தொடர்ந்து அதிகரிப்பப்படும் விலைவாசிகளால் இலங்கை மக்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr19

மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆற

Sep22

குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பா

Feb17

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுத

Mar13

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு

Jan26

.கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும

Oct16

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார

Apr10

எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி நடத்தப்படவிருந்த 2022ம் ஆண

Feb28

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தி

Aug17

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திவுல

Jan24

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எ

Dec31

பதுளை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அ

May16

வவுனியா உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணத்தடை

Apr12

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பத

Jan18

இந்த வருடத்தின் முதலிரண்டு வாரங்களில் 39,172 சுற்றுலாப் ப

Jul14

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மு