இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வகையில் மாவட்டங்கள், பிரதேசங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் போராட்டங்கைளை தொடர்ந்து முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பின் பெருமளவான பகுதிகள் முடக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.