உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கைக்கு சாதகமான நிலைப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொருளாதார ரீதியில் ரஷ்யாவை மேற்குலக நாடுகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், பெரும் சிக்கலில் புத்தின் அரசாங்கம் மாட்டியுள்ளது.
இந்நிலையில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வழங்க ரஷ்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறுவது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கச்சா எண்ணெயை பெறுவதற்காக ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் விதிக்கும் தடைகள் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அத்துடன் ரஷ்யாவிடமிருந்து இலங்கைக்கு எண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும். ரஷ்யாவின் நட்பு நாடுகள் என்ற வகையில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை அதிகரித்து வரும் சந்தை விலையை விட குறைவான விலையில் வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.