டி.இமான் தற்போது கோலிவுட்டில் அதிகம் பிஸியான இசையமைப்பாளர்களில் ஒருவர். அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் என தொடர்ந்து அவர் இசையில் பெரிய படங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
அவர் தனது மனைவியை கடந்த வருட இறுதியில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
அவர் மோனிகா ரிச்சர்ட் என்பவரை 2008ல் திருமணம் செய்துகொண்ட நிலையில் அவரிடம் இருந்து நவம்பர் 2020ல் பிரிந்தததாக கூறிய அவர், சுமூகமாக பேசி விவாகரத்து பெற்றுவிட்டதாக கூறி இருந்தார்.
இந்நிலையில் இமான் அடுத்த திருமணம் செய்ய இருக்கிறார். அதற்காக சில கண்டிஷன்களையும் அவர் போட்டிருக்கிறார்.
பெண் விதவை அல்லது விவாகரத்து ஆணவராக இருக்க வேண்டும். அவருக்கும் பெண் குழந்தை இருக்க வேண்டும், தன் குழந்தைகளையும் அன்பாக கவனித்துக்கொள்ள வேண்டும் என அவர் கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.