உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது.
இன்று 19 நாட்களாக தாக்குதல் தொடர்கிறது. உக்ரைன் தலைநகர் கீவை ரஷ்ய படையினர் நெருங்குவதாகவும், நகரை சுற்றி வளைத்துவிட்டதாகவும் தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதனால் கீவ்வை ரஷ்யா கைப்பற்றிவிடுமா என்ற கேள்வி எழுந்து வந்தது. இது குறித்து அமெரிக்க செனட்டரும், செனட் புலனாய்வுக் குழுவின் துணை தலைவருமான மார்கோ ரூபியோ ஒரு அதி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.