உலகில் முதன்முதலாக சாப்பிடக்கூடிய புடவையை கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தயாரித்துள்ளார்.
கேரளாவில் கொல்லம் நகரைச் சேர்ந்தவர் எலிசபெத் ஜார்ஜ். தொழில் ரீதியாக உயிரியல் ஆராய்ச்சியாளராக உள்ள இவர், சமீபத்தில் தனது பட்டப்படிப்பினை முடித்துள்ளார்.
ஃபேஷன் டிசைனிங் மற்றும் உணவு தயாரிப்பில் ஆர்வம் கொண்ட இவரின் மலர் மற்றும் பேக்கிங் முயற்சிக்கு பின்னே ஒரு கதையும் இருக்கின்றதாம். ஆம் எலிசபெத் ஜேக்கப் பேக்ஸ் (இது வடிவமைப்பாளர் கேக்குகளை உருவாக்குகிறது) மற்றும் ஜேக்கப் ஃப்ளோரல்ஸ் (நிகழ்வுகளுக்கான கைவினைப் பூக்கள்) ஆகியவற்றின் நிறுவனர் ஆவார்.
ஜேக்கப் என்பவர் குறித்த பெண்ணின் தாத்தா ஆவார். இவர் 33 வருடங்களுக்கு முன்பு ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார். இவருக்கு பேக்கரி வைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்துள்ளது.
விபத்தில் தாத்தா உயிரிழந்ததால் அவரது நிறைவேறாத ஆசையை எலிசபெத் கையில் எடுத்ததோடு, தனது பேக்கிங் மற்றும் மலர் முயற்சிக்கு "ஜேக்கப்" என்று பெயரிட்டுள்ளராம்.