மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேசம் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.இன்று காலை நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதின.முதலில் விளையாடிய வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன் எடுத்தது.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 225 ரன் எடுத்தது.இதனால் வங்காளதேச அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி இந்த போட்டி தொடரில் முதல் வெற்றியை பிடித்தது. பாகிஸ்தான் தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியது.13-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன் எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு 236 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.