உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ரஷ்ய ராணுவ துருப்புகளை பைரக்டர் Bayraktar என்ற ஆளில்லா போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தி உக்ரைன் ராணுவம் அதிரடிக்காட்டி வருகிறது.
உக்ரைனில் 18வது நாளாக போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் கீவ்வை ரஷ்ய துருப்புகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
போரின் 17வது நாளான நேற்று நகரின் பெரும்பாலான பகுதிகளில் வான் தாக்குதலுக்கான அபாய எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர்.
போர் தொடங்கியதில் இருந்து நாளுக்குநாள் ரஷ்யாவின் இந்த பயங்கரமான வான் தூக்குதல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து அவற்றை கட்டுப்படுத்துவதற்காக உக்ரைன் வான் எல்லைகளை பறக்க தடைவிதிக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் அல்லது ரஷ்ய வான் தாக்குதலை எதிர்த்து போரிட போர் விமானங்களை தரவேண்டும் என மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் உக்ரைன் கோரிக்கை விடுத்தது, ஆனால் போரின் தீவிரத்தன்மை இந்த கோரிக்கை ஐரோப்பிய பிராந்தியத்திலும் பரவ செய்யும் என்பதால் அதனை ஏற்க மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுப்புத் தெரிவித்துவிட்டன.
இதனிடையே ரஷ்யா ராணுவ துருப்புகளை அளிக்கும் பணியை உக்ரைன், துருக்கிய நிறுவனமான Baykar Defence ஆல் தயாரிக்கப்பட்ட Bayraktar என்ற ஆளில்லா போர் விமானம் மூலம் அதிரடியாக தாக்கி அழித்து வருகின்றனர்.
இந்தநிலையில், உக்ரைனின் தலைநகர் கீவ்வை சுற்றிவளைத்த ரஷ்ய ராணுவ துருப்புகளின் ரொக்கெட் ஏவுகணை தளத்தை Bayraktar என்ற ஆளில்லா போர் விமானம் தாக்கி அழித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்த வீடியோ பதிவை ட்விட்டர் தளத்தில் உக்ரைன் பாதுகாப்புத்துறை வெளியீட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிர்கள் இதன் மூலம் பாதுகாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
https://twitter.com/i/status/1502639111483633670