அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாட், உக்ரைன் தலைநகர் கீவுக்கு வெளியே இர்பின் என்ற நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று உக்ரைனிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் ரஷ்ய படையினரால் இலக்கு வைக்கப்பட்டார் என்று கீவின் தலைமை காவல்துறை அதிகாரி அண்ட்ரிவ் நெபிடோவ் தெரிவித்துள்ளார்.
மேலும் இரு பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளனர்; அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் உக்ரைனில் செய்தி சேகரிக்கும் முதல் வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.