More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்ய இராணுவ வீரர்களின் சடலங்களால் நிரம்பி வழியும் பிரேத அறைகள்
ரஷ்ய இராணுவ வீரர்களின் சடலங்களால் நிரம்பி வழியும் பிரேத அறைகள்
Mar 14
ரஷ்ய இராணுவ வீரர்களின் சடலங்களால் நிரம்பி வழியும் பிரேத அறைகள்

போரில் உயிரிழந்த ரஷ்ய படையினரின் சடலங்கள் பெலாராஸ் நாட்டின் பிரேத அறைகளில் குவிந்து கிடப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.



போரில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் சடலங்கள் டிரக்குகள் மூலம் பெலாரஸில் உள்ள பிரேத அறைக்கு கொண்ட செல்லப்படுவதாகவும், பின் அங்கிருந்து விமானம் அல்லது புகையிரதம் மூலம் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டு வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.



பெலாரஸ் நகரங்களான Mozyr, Homel மற்றும் Narouilaவில் உள்ள பிரேத அறைகளே இவ்வாறு நிரம்புள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.



இறந்த மற்றும் காயமடைந்த ரஷ்ய வீரர்கள் பற்றிய தகவல்களைப் பரப்பினால் அல்லது பிடிபட்டால், அவர்களின் வேலையை இழக்க நேரிடும் என்று பெலாரஷ்ய மருத்துவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.



இரண்டு வாரங்களாக நடந்து வரும் போரில் இதுவரை பல ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.



உக்ரைன் மீதான படையெடுப்பை மேற்கொண்டுள்ள ரஷ்ய படையினருக்கு அந்தப்போர் மிகவும் இலகுவாக இருக்கப்போவதில்லை என்பது தற்போது புரிந்திருக்கும்.



ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி இதுவரை கிடைக்காததால் ரஷ்ய படையினர் மத்தியில் பெரும் மனச்சோர்வு ஏற்பட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.



இவ்வாறு மனச்சோர்வு ஏற்பட்டுள்ள அவர்கள் யுத்த களத்தில் சரியாக போரிடமுடியாத நிலையில் பெரும் இழப்புக்களை சந்தித்து வருவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிர

Mar23

ரஷ்யா இன்னும் உக்ரைனில் தனது இராணுவ இலக்குகள் எதையும்

Jul06

பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மாநில முதல் மந்தி

Dec31

பாகிஸ்தானின் மத்திய குவெட்டா பகுதியில் வியாழக்கிழமை

Feb28

ரஷியாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு

May20

உக்ரைனுக்கு எதிரான போரில் உணவை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத

Jun12

தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, இங்

Feb25

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக

Jan20

தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக அமெரிக்க

Mar14

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக

Feb22

உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்

Oct04

நவம்பரில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்க

Jun08

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்

Mar05

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எவ்வாறான பாதிப்புக

Jul22

2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம்