உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு ரஸ்யாவை பொறுப்பு கூற வைக்கப்போவதாக அமெரிக்காவும் பிரான்சும் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோனுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே இந்த உறுதிப்பாடு வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பு இன்று 18 வது நாளை அடைந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, மேற்கு நகரமான யாவோரிவில் உள்ள இராணுவப் பயிற்சித் தளம் சரமாரியாக ஏவுகணைகளால் தாக்கப்பட்டது.
இதேவேளை நேட்டோ தலைவர்கள் தொடர்ந்தும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியின் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.
ரஸ்யாவின் தாக்குதல்களின்போது நேட்டோவின் வான்வெளி ஆதரவு இல்லாமையால், உக்ரைனில் விழுவதைப்போன்று, ரஸ்யாவின் ஏவுகணைகள் நேட்டோ பிரதேசத்தில் விழுவதற்கு நேரமாகாது என்று அவர் எச்சரித்துள்ளார்.