முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ரூபாவின் திடீர் மதிப்பிறக்கம் மற்றும் நூற்றுக்கணக்கான பொருடகளுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் சங்கிலித் தொடராக சகலவற்றையும் சீர்குலைப்பதுடன் ஏற்கனவே வானளாவ உயர்ந்திருக்கும் நுகர்வுப் பொருட்களின் விலைகளையும் சேவைகளுக்கான கட்டணங்களையும் மோசமாக அதிகரிக்க செய்திருக்கின்றது.
இலங்கை மத்திய வங்கி இந்த வார ஆரம்பத்தில் ரூபாவின் உச்ச வரம்பை டொலருக்கு 230 ஆக நிரை்ணயம் செய்வதாக கூறியது. b அது அதன் மதிப்பை கிட்டத்தட்ட 157ஆல் குறைக்கிறது.