பாதுகாப்பற்ற நிலையில் தொடுக்கப்பட்டிருந்த மின்சார வேலியால் சிறுவர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்னாகாடு கிராமத்தில் பட்டம்பிட்டி எனும் பின்தங்கிய பிரதேசத்தில் தென்னையில் கட்டப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின் வேலியில் 13 வயதுடைய இரு சிறுவர்கள் சிக்கி உயிரிழந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வழக்கம் போல் தென்னந்தோப்புக்கு விறகு சேகரிக்கச் சென்ற ரியாஸ் முகம்மது அசீக் (வயது 13), முகமது இப்ராஹிம் (வயது 13) ஆகிய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.