சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மத்திய, தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதுடன், சில பிரதேசங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, ஊவா, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.