சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலைதளங்கள் முக்கியமான காரணமாக இருப்பது உள்ளபடியே முழுமையான உண்மைதான் எனவும், சமூக வலைதளங்கள் மூலம் நடக்கும் இந்த வக்கிரங்களுக்கு எல்லா வகையிலும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று முன் தினம் கூடியது.
மூன்றாவது நாளாக சென்னை தலைமைச் செயலகத்தில் மாநாடு நடைபெற்ற நிலையில் நண்பகல் ஒரு மணியுடன் மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.
குறிப்பாக காவல்துறையினருக்கு நிறைய ஆலோசனைகளையும் , அறிவுறுத்தல்களையும் வழங்கிய முதல்வர் ஸ்டாலின், குற்றங்களை தடுக்க பாரபட்சம் பார்க்கக் கூடாது எனவும், சாதி மத மோதல்களுக்கு மத பிரச்சனைகளுக்கும் சமூக வலைதளங்கள் முக்கியமான காரணமாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மாநாட்டில் நிறைவாக பேசிய முதல்வர் ஸ்டாலின், " சாதி மத மோதல்கள் குறித்து நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இங்கே விரிவாகப் பேசினார். சாதி மோதல்களை சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டும் பார்க்காதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் அது சமூக ஒழுங்கு பிரச்சினை கிராமங்களில் இந்த பிரச்சனை அதிகமாக உருவாவதாக காவல்துறை கண்காணிப்பாளர் இங்கே பேசும்போது சொன்னார்.