உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.
முதல் முறையாக இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்துள்ளனர். இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
ஏனென்றால், கமல் ஹாசனை பார்த்து சினிமாவிற்குள் வந்த லோகேஷ், தனது குருநாதரை வைத்து எப்படி இயக்கியுள்ளார் என்று பார்க்க ரசிகர்கள் அவர்களுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், நமது சினிஉலகம் சேனலுக்கு கிடைத்த Exclusive-வான தகவலின்படி, வருகிற மே 27 அல்லது ஜூன் 12ஆம் தேதி விக்ரம் படம் வெளியாகும் என தெரியவந்துள்ளது. 