உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்காக ரஸ்யா நடத்தவுள்ள போர் ரஷ்யாவின் “புதிய ஸ்டாலின்கிராட்” ஆக இருக்கலாம் என்று உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் இளைய நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்வியாடோஸ்லாவ் யூரா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கீவ் நகரின் புறநகர்ப் பகுதியில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் ரஷ்ய படைகள் நகரத்தை நோக்கி முன்னேறினால், அது பாரிய இழப்புகளுக்கு தயாராக வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கீவ் என்பது மில்லியன் கணக்கான மக்கள் வசிக்கும் ஒரு பெரிய நகரம், ரஷ்யர்கள் உள்ளே வர முயற்சித்தால் அவர்கள் கைகளில் சண்டையிடுவார்கள் - ரஸ்யர்கள் அதை உருவாக்க விரும்பினால், இது அவர்களின் ஸ்டாலின்கிராட் ஆக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
1942-43 ஆம் ஆண்டின் இரண்டாவது உலகப் போரின் இரத்தக்களரி போரையே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சோவியத் ரஸ்யாவின் ஸ்டாலின்கிராட் என்ற இடத்தை கைப்பற்றுவதற்காக இடம்பெற்ற போரின்போது 11 லட்சம் சோவியத் துருப்புக்கள் மற்றும் 800,000 நாஸி ஜெர்மன் மற்றும் ரோமானிய படையினர் மரணித்தனர்.
இந்த போரில் சோவியத் ரஸ்யா இறுதியில் வெற்றிப்பெற்றது.எனவே உக்ரைன் தலைநகர் கீவ் போரின் போது எவரும் சரணடையப் போவதில்லை - இதற்கு நிச்சயமாக உத்தரவாதம் அளிக்க முடியும் என்று ஸ்வியாடோஸ்லாவ் யூரா குறிப்பிட்டுள்ளார்.