More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • உலக சாதனை படைத்த ஒன்றரை வயது இலங்கை குழந்தை! கவலை வெளியிட்ட பெற்றோர்
உலக சாதனை படைத்த ஒன்றரை வயது இலங்கை குழந்தை! கவலை வெளியிட்ட பெற்றோர்
Mar 12
உலக சாதனை படைத்த ஒன்றரை வயது இலங்கை குழந்தை! கவலை வெளியிட்ட பெற்றோர்

அனுராதபுரத்தில் அழகப்பெருமாகம பகுதியில், பிறந்த ஒன்றரை வயதான பெண் குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ளார்.



ஐரின் என்ற குழந்தையே 7 நிமிடங்கள் மற்றும் 6 வினாடிகளில் அதிக எண்ணிக்கையிலான பறவைகளை அடையாளம் கண்டு உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.



மேலும் இந்த குழந்தை  2020 ஆம் ஆண்டு மே 8 ஆம் திகதி அன்று பிறந்துள்ளது.



ஆசிய சாதனை புத்தகத்திலும் இந்த குழந்தையின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. பூக்கள், விலங்குகள், வாகனங்களை வடிவமைப்பது போன்ற 500க்கும் மேற்பட்ட படங்களை அவர் குறுகிய நேரத்துக்குள் அடையாளம் கண்டுள்ளார்.



மேலும் அந்த குழந்தையால் 25க்கும் மேற்பட்ட இலங்கைத் தலைவர்களை அடையாளம் கண்டுள்ளார். இலங்கையின் அரசியல் தலைவர்கள் உட்பட பல தலைவர்களின் புகைப்படங்களை சரியாக அடையாளம் காட்டி உலக சாதனை படைத்துள்ளார்.



குழந்தைக்கு ஒரு வயதாகும் போது பெற்றோர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்களை குழந்தைக்கு காண்பித்து அவற்றை அடையாளம் காணும் வகையில் பயிற்சிகளை பெற்றோர் அன்பாக வழங்கியுள்ளனர்.



காலையில் எழும்பும் போதே குறித்த குழந்தை இந்த புகைப்படங்களை இனம் காண்பதற்கு ஆர்வமாக உள்ளதை அறிந்து கொண்டனர்.பின்னர் மன்னர்கள், உலகத்தலைவர்களின் படங்களை இனம் காண்பதற்கு குழந்தையிடம் பெற்றோர் மென்மையான பயிற்சிகளை வழங்கி குழந்தை இப்போது பல்வேறு திறமைகளுடன் மிளிர்கிறது. 30க்கும் மேற்பட்ட பாடல்களை குறித்த குழந்தை மனப் பாடம் செய்து ஒப்புவிக்கும் அதீத திறமையும் கொண்டுள்ளது.



எனது அம்மா எம்மை கஷ்டப்பட்டு வளர்த்தார். நாங்கள் நான்கு சகோதரங்கள். ஆகவே எனது பிள்ளை திறமையாக வர வேண்டும் என்று நான் நினைத்து குழந்தையுடன் அன்பாகவும், அறிவாகவும், விளையாட்டாகவும் பேசி அவரின் திறமைகளை தற்போது வளர்த்து வருகிறேன்.



இதுவரை எனது குழந்தையின் திறமையை எந்த தலைவர்களும் பாராட்ட வரவில்லை, அங்கீகாரமும் வழங்கவில்லை என குழந்தையின் தாய் கவலையுடன் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct24

கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்க

Sep22

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு

Feb06

அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடா

Mar28

ஐ.நா. மனித உரிமைகள் சபையில்  நிறைவேற்றப்பட்ட தீர்மான

May26

இன்று விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 240 சிறைக் கைதிகள்

Oct04

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமு

Mar02

வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உற

Jul08

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட

Aug28

கொழும்பு முழுவதும் நூற்றுக்கு நூறு வீதம் கொரோனா வைரஸி

May03

இந்திய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி வழங்கும் 200 மி

Apr08

 

எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க

Jan22

சிறுநீரகத்தில் கல் சேர்ந்திருப்பதை முன்கூட்டியே கண்

Feb10

மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் ந

Dec14

மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை ச

Apr26

நாட்டிற்கு பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்த