More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அரை மணிக்கு ஒரு முறை குண்டு வீச்சு; முள்ளிவாய்க்காலாக மாறிய உக்ரைனின் மரியுபோல் நகரம்
அரை மணிக்கு ஒரு முறை குண்டு வீச்சு; முள்ளிவாய்க்காலாக மாறிய உக்ரைனின் மரியுபோல் நகரம்
Mar 12
அரை மணிக்கு ஒரு முறை குண்டு வீச்சு; முள்ளிவாய்க்காலாக மாறிய உக்ரைனின் மரியுபோல் நகரம்

 உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இன்று 16வது நாளை எட்டியுள்ள நிலையில் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.



இந்த நிலையில் உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலில் ரஷ்யப் படைகள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை குண்டு வீசுவதால் அங்குள்ள 4 லட்சம் மக்களும் கடந்த இரண்டு நாட்களாக நரகத்தில் சிக்கியது போல தத்தளிக்கிறார்கள் என அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.



மரியுபோலை கிட்டத்தட்ட தனது முழுமையானக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ரஷ்ய படைகள்.அங்கிருந்து , யாரையுமே வெளியேற ரஷ்ய படைகள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகின்றது.



உக்ரைனின் கார்சன், ஒடேசா, செர்னிஹிவ், செனோபில், மரியுபோல், சுமி எனப் பல நகரங்களை தன்வசப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள் தற்போது தலைநகர் கீவை குறிவைத்து முன்னேறி வருகிறது.



உக்ரைன்  மரியுபோல்



கீவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதனால் கீவ் நகரிலிருந்து 20 லட்சம் மக்கள் வெளியேறியதாக அந்நகர மேயர் கூறியுள்ளார்.



உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 40 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இவ்வாறான நிலையில் ரஷ்யா உக்ரைன் இடையேயான போர்ச் சூழல் குழப்பமானதாக மாறியுள்ளதால் அந்நாடுகள் பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்த மத்தியஸ்தம் தேவை என சீனப் பிரதமர் லீ கருத்து தெரிவித்துள்ளார்.



எனினும் , ரஷ்யா மீது சீனா தடை விதிக்குமா? ரஷ்யாவின் செயல்களுக்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்குமா போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.



அதேசமயம் உக்ரைன் உயிரி ஆயுதங்களை தயாரிக்கிறது என ரஷ்யாவும், ரஷ்யா தான் தயாரிக்கிறது என அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் கூறிவரும் நிலையில் உக்ரைனில் உள்ள சோதனைக் கூடங்களில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கும் நோய்க்கிருமிகளை அழித்துவிடுமாறு உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.



இந்நிலையில் ரஷ்ய நேரப்படி மார்ச் 11 ஆம் தேதி காலை 10 மணி முதல் கீவ், சுமி, கார்கிவ், மரியுபோல், செர்னிஹிவ் ஆகிய 5 நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற மனிதாபிமான வழித்தடம் அனுமதிக்கப்படும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில்  இரு நாடுகளுக்குமிடையிலான போர்  முடிவுக்கு வருமா என்கின்ற எதிர்பார்ப்பு  உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.



முள்ளிவாய்க்கால்இதேவேளை ரஷ்யாவின் மிலேச்சத்தனமான  தாக்குதலால் உக்ரைனின் மரியுபோல் நகரம்  முள்ளிவாய்காலாக மாறியுள்ளதாக இலங்கை தமிழர்கள் ஆதங்கத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb18

உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து

Mar07

உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து

May18

13 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மீண்டும் இரத்தம் பார்த

Aug18

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த திங்கட்

Apr14

அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நாக்ஸ்வில்லே நகரில் உ

Mar15

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து

Mar28

உக்ரைனை இரண்டாக பிரிப்பது பற்றி ரஷ்யா ஆலோசித்து வருவத

Mar24

உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும்

Feb18

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்

Jun20

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடு

May27

ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை வி

May05

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்

Apr15

 இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம

Aug21

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலு

Oct12

பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெ