More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கண்டிப்பாக கொல்லப்படுவோம்; அச்சத்தில் ரஷ்ய வீரர்கள்!
கண்டிப்பாக கொல்லப்படுவோம்; அச்சத்தில் ரஷ்ய வீரர்கள்!
Mar 12
கண்டிப்பாக கொல்லப்படுவோம்; அச்சத்தில் ரஷ்ய வீரர்கள்!

  உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் போர் தொடர்ந்து வரும் நிலையில், போருக்கு பின்னர் ரஷியா திரும்ப நேர்ந்தால் கண்டிப்பாக தாங்கள் கொல்லப்படுவோம் என ரஷிய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.



உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்த ரஷிய வீரர்கள் சிலர் கீவ் நகரில் ஊடகங்களை சந்தித்தனர். இதன்போது பேசிய ஒரு ரஷிய இராணுவ வீரர்,போருக்கு பின் சக வீரர்களால் கண்டிப்பாக கொல்லப்படுவோம் என அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.



உக்ரைனுக்கு எதிராக போருக்கு புறப்பட்ட நாள் முதல், தாங்கள் இறந்ததாகவே கருதப்படுவதாகவும், சமீபத்தில் பெற்றோரை தொடர்புகொண்ட போது, எங்களுடைய இறுதிச்சடங்குகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அவர்கள் கூறியதாகவும் அந்த வீரர் தெரிவித்தார்.



போருக்கு பின்னர் சரணடைந்துள்ள வீரர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் என்றும் , அவ்வாறு நேர்ந்தால் சொந்த இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுவது உறுதி என அந்த வீரர் தெரிவித்தார்.



இதேவேளை , ரஷிய துருப்புகளிடம் இருந்து 20 வயது மதிக்கத்தக்க ஒரு உக்ரேனிய இளம்பெண்ணை பாதுகாக்க முயன்ற ரஷிய அதிகாரி ஒருவர் சக வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது.



உக்ரைன் மீதான போரில் இதுவரை ரஷிய தரப்பில் 12,000 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் நிர்வாகம் தெரிவித்து வருகிறது. எனினும் 498 பேர்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாக ரஷிய தரப்பில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan23

டொமினிக்கன் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின

Jan24

அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொட

Jun18

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Sep04

இங்கிலாந்து 

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்ப

May09

ரஷ்யா அணு ஆயுதம் மூலம் பிரித்தானியாவைத் தாக்கினால், ப

Mar27

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அவசரகால நடவடிக்கைகளை மேலு

Oct21

இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து  திரவங்களால்

Jul25