உக்ரைனில் தாக்குதல் நடத்தும் ரஷ்ய படைகளுக்கு கட்டளை வழங்கும் மூன்றாவது ரஷ்ய மேஜர் ஜெனரல் கொல்லப்பட்டதை மேற்கத்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளதுடன் அவர் ரஷ்யாவின் கிழக்கு இராணுவ மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளனர்.
அதிகாரிகள் ஜெனரலின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் முன்னதாக உக்ரைன் இராணுவம், ரஷ்யாவின் கிழக்கு மாவட்டத்தின் 29-வது படையின் தளபதியான மேஜர் ஜெனரல் அண்ட்ரி கோல்ஸ்னிகோவ் கொல்லப்பட்டதாகக் கூறியது.
போர்க் களத்திலோ அல்லது அதற்கு அருகிலோ உயர்மட்ட இராணுவ பிரமுகர்கள் இருப்பது ரஷ்யாவின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி செல்லவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.