உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் இன்று மதியம் விபத்துக்குள்ளானதாக குரோஷிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
ஆறு தொன் எடையுள்ள விமானம் குரோஷியாவை அடைவதற்கு முன்பு ருமேனியா மற்றும் ஹங்கேரியில் வான்வெளியில் பறந்து கொண்டிருந்தது,
மேலும் குரோஷியா வான்வெளியில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து விபத்துக்குள்ளானது. குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் எரிபொருள் செயலிழந்ததால் உக்ரைனின் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அதிபர் சோரன் மிலானோவிக் தெரிவித்தார்.